சுகாதாரம்
கழிப்பறைகளைக் கட்டுவதன் மூலம் மலத்தை அகற்றுவதில் தொடங்கி, மலக்கழிவு, கழிவுநீர் மற்றும் திடக்கழிவுகளை அகற்றுதல், கொண்டு செல்லுதல், மற்றும் இறுதி சுத்திகரிப்பு வரை முழு சுகாதாரச் சங்கிலியையும் ஆக்ஸ்பாம் நிறுவனம் உள்ளடக்கியுள்ளது. கழிவுகளை மதிப்புமிக்க மறுபயன்பாட்டிற்கு உட்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட, ஒவ்வொரு கட்டத்திலும் சேவைகளின் தரத்தை மேம்படுத்த நாங்கள் பணியாற்றுகிறோம். பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும், கண்ணியத்தைப் பேணவும், மிகவும் நலிவடைந்தவர்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் சுகாதார சேவைகள் பாதுகாப்பாகவும் சமமாகவும் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அவர்களுடன் கலந்தாலோசித்து பணியாற்றுவது எங்கள் பணியின் மிக முக்கிய அம்சமாகும்.
செப்டிக் டாங்குகள் என்பவை சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை உள்ளெடுத்து, திடப்பொருட்கள் அடியில்தங்க (கசடு) அனுமதித்து, மீதமுள்ள திரவத்தை வெளியேற்றும் தொட்டிகளாகும்.

